71 கண்ணிவெடி; 38 வெடிப்பொருட்களை கண்டுபிடித்து அசத்திய எலி உயிரிழந்தது
world
sad news
rat death
By Nandhini
கம்போடியாவில் நில கண்ணிவெடிகளை தனது மோப்ப சக்தியால் கண்டுபிடித்து அசத்தி வந்த எலி பரிதாபமாக உயிரிழந்தது.
தாண்சானியாவில் பிறந்த ஆப்ரிக்க வகை எலியான "மெகாவா"விற்கு கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, கம்போடியா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுவரை 71 கண்ணி வெடிகளையும், 38 வெடிப்பொருட்களையும் தனது மோப்ப சக்தியால் கண்டறிந்த மெகாவா கடந்த 2021ம் ஆண்டு ஓய்வு பெற்றது. இந்நிலையில், எட்டே வயதான மெகாவா உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அதை பராமரித்து வந்த தன்னார்வல மையம் தெரிவித்துள்ளது.

