அமெரிக்காவில் வெங்காயம் மூலம் பரவும் வினோத நோய் - 650க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

அமெரிக்காவில், வெங்காயத்துடன் தொடர்புடைய சால்மோனெல்லா என்ற நோய் பரவலால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நோய் காரணமாக 37 மாநிலங்களில் 650க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட 129 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த நோய் பரவலால் யாரும் இதுவரை இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோயின் தாக்கம் டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமாவில் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் பரவல், மெக்சிகோவின் சிவாவாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முழு சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் வெங்காயங்களிலிருந்து பரவியதாகவும், இந்த வெங்காயங்கள் புரோசோர்ஸ் இன்க் மூலம் அமெரிக்கா முழுவதும் விநியோகிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெங்காயத்தை மாதக்கணக்கில் சேமித்து வைக்கலாம் என்பதால், இன்னும் வீடுகளிலும் வணிகங்களிலும் இந்த வெங்காயம் இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சிவாவாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு புரோசோர்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்ட புதிய சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் வெங்காயத்தை வாங்கவோ அல்லது உட்கொள்ளவோ வேண்டாம் என வாடிக்கையாளர்கள் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், ஸ்டிக்கர் அல்லது பேக்கேஜிங் இல்லாத முழு சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் வெங்காயத்தை வெளியே எறியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்