‘ஒமைக்ரானை ரொம்ப ஈஸியா நினைக்காதீங்க... போட்டுத் தள்ளிடும்...’ - எச்சரிக்கை விடுத்த WHO

virus world world health organization omigron
By Nandhini Jan 07, 2022 03:37 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

 கொரோனா வைரசின் புதிய வகை மாறுபாடான ஓமைக்ரான் வைரஸ் உலகளவில் அதிகமாக பரவி வருகிறது. இந்த ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸை விட கடுமையான நோயை உருவாக்குவதாக கருதப்படுகிறது. அதனால், ஒமைக்ரான் வைரஸை “சாதாரணமானது” என்று கருதிவிட கூடாது என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது நவம்பரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மாறுபாட்டிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைந்துள்ளதாக ஆரம்பகால ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று நிருபர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ மேலாண்மைக்கான தலைவர் ஜேனட் டயஸ் கூறினார்.

மேலும் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் இருவரிடமும் தீவிரத் தன்மை குறைவதற்கான அபாயமும் உள்ளதாக தோன்றுகிறது என்றும் அவர் கூறினார்.

இது குறித்து, நிருபர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பேசுகையில், “டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமைக்ரான் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும், குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்களில், இது லேசானது என்று வகைப்படுத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முந்தைய மாறுபாடுகளைப் போலவே, ஒமைக்ரான் மக்களை மருத்துவமனையில் சேர்க்கிறது மற்றும் மக்களைக் கொல்கிறது” என்று கூறினார்.