ஒமைக்ரான் கொரோனா தொற்றால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை - உலக சுகாதார மையம் தகவல்

world-omigron- virus- -world-health-organization
By Nandhini Dec 05, 2021 06:26 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுவரை யாரும் ஒமைக்ரானால் உயிர் இழக்கவில்லை என்று உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.

இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்துள்ளது. இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸால் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மேலும், ஒமைக்ரான் வைரஸால் ஆபத்திலுள்ள நாடுகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்நிலையில், உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இருந்தாலும், இதுவரை இறப்பு எண்ணிக்கை இல்லை என்று உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 375 பேர் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒமைக்ரான் கொரோனா தொற்றால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை - உலக சுகாதார மையம் தகவல் | World Omigron Virus World Health Organization