Omicron வைரஸ் - பிரிட்டனில் முதல் இறப்பு பதிவு - இன்னும் 4 மாதத்தில் உச்சம் அடையுமாம்

world-omicron- death-one-person
By Nandhini Dec 14, 2021 06:37 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' (Omicron) எனும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு, உலகம் முழுவும் வேகமாக பரவி வருகிறது.

தற்போது வரை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸால், அந்நாட்டில் ஒமிக்ரான் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் புதியதாக 1,200-க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதுவரை அந்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 3000 கடந்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர் போரீஸ் ஜான்சன், முதன்முறையாக ஒமிக்ரான் வைரஸ் பாதித்த ஒருவர் உயிரிழந்திருப்பதாக அறிவித்துள்ளார்.

டெல்டா வேரியண்டுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் வைரஸினால் ஏற்படும் பாதிப்பு குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்ற அவர், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் வேகம் மும்மடங்காக உள்ளதாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் வேகமாக வைரஸ் பரவி வருவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ள போரீஸ்ஜான்சன், 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

2 டோஸ் தடுப்பூசி ஒமிக்ரானை கட்டுபடுத்தாது என்றும் போரீஸ் ஜான்சன் கூறியுள்ளார். ஒமிக்ரானால் ஏற்படுத்தும் பாதிப்பு மிக குறைவானதாக இருக்கும் என்ற தகவல்கள் வந்தாலும், நிபுணர்களால் அதனை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என போரீஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

இப்போது அனைவரும் செய்ய வேண்டிய தலையாய கடமை என்னவென்றால், முடிந்தளவுக்கு நம்மை நாம் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.