ஒமைக்ரான் குறித்து பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டறிந்து வெளியிட்ட முக்கிய தகவல்

world omicron
By Nandhini Dec 23, 2021 05:37 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஒமைக்ரான் வீரியத்தின் தன்மை குறித்து பிரித்தானியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பெரும்பாலான பிரித்தானியர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு லேசான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஒமைக்ரான் தொற்று குறித்து ஆதாரங்களை நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -

பிரித்தானியா சுகாதார பாதுகாப்பு நிறுவனம், ஒமைக்ரான வீரியத்தின் தன்மை குறித்து அதிகாரப்பூர்வமான தரவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதில், தீவிரம் குறைந்த அறிகுறிகளுடன் கூடிய லேசான பாதிப்பால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஓமிக்ரானின் பரவும் தன்மை மிக அதிகமாக இருப்பதால், அது லேசானதாக இருந்தாலும், நோய்த்தொற்றுகள் அதிகரித்து, அதிக எண்ணிக்கையிலானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க வாய்ப்பு உள்ளது.

அதே சமயம், கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் இறப்பதற்கும், அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.