2021 அமைதிக்கான நோபல் பரிசு - இருவருக்கு பகிர்ந்தளிப்பு

journalist worldnobelprize
By Irumporai Oct 08, 2021 09:34 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்.5, திங்கள்கிழமை முதல் தொடங்கி அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் இலக்கியத்துக்கு நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் பத்திரிகையாளர் மரியா ரெசா, ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக நார்வே நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

அமைதிக்காகவும் ஜனநாயகத்தின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்காகவும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.