அறிமுகமான 2 வருஷம்தான்; உலகின் நம்பர் 1 வீரர் - சரிந்த கோலி, ரோஹித்!

Cricket Indian Cricket Team England Cricket Team ICC Men
By Sumathi Dec 12, 2024 10:00 AM GMT
Report

ஹாரி ப்ரூக் நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

 ஐசிசி தரவரிசை

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் 898 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

harry brook

இந்த ஆண்டில் மட்டும் இப்போது வரைக்கும் 17 இன்னிங்ஸ்களில் 1036 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 4 சதங்களும் 2 அரைசதங்களும் அடங்கும். இப்போது வரைக்கும் 8 சதங்களை அடித்துள்ளார். அதே அணியைச் சேர்ந்த ஜோ ரூட் 897 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நித்திஷ் ரெட்டியை தூக்குனாதான் இந்தியா ஜெயிக்கும்; இதனால்தான்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் வார்னிங்!

நித்திஷ் ரெட்டியை தூக்குனாதான் இந்தியா ஜெயிக்கும்; இதனால்தான்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் வார்னிங்!

பட்டியல் விவரம்

நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் (812), இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (811) ஆகியோர் முறையே 3 மற்றும் 4-வது இடங்களில் உள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 661 புள்ளிகளுடன் 6 இடங்களை இழந்து 20-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

virat - rohit sharma

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 890 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவின் நேதன் லயன், இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, நியூஸிலாந்தின் மேட் ஹென்றி, பாகிஸ்தானின் நோமன் அலி ஆகியோர் முறையே 5 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.