உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மாபெரும் சாதனை
உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மாபெரும் சாதனை படைத்திருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்தவர் பிரக்ஞானந்தா (16). இணையதளம் வழியாக ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் பிரக்ஞானந்தா இணையதளம் வழியாக கலந்து கொண்டார். முதல் 7 போட்டி நடைபெற்றது.
அதில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 8-வது போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்செனை எதிர்கொண்டார்.
ஆரம்பத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை விளையாடினார் பிரக்ஞானந்தா, 39 நகர்வுகளில் கார்ல்செனை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். 2013ம் ஆண்டு 8 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரக்ஞானந்தா, இன்று கார்ல்செனை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகிறது. சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தாவிற்கு பலர் பாராட்டை குவித்து வருகிறார்கள்.