மக்களின் மன அழுத்தத்தை போக்க ஸ்பெயின் நாட்டில் அழுகை அறை அறிமுகம்

world-news-depression-crying-room
By Nandhini Oct 18, 2021 07:26 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அழுகை அறைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இன்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விதத்தில் மன அழுத்தம், கவலை சூழ்ந்து காணப்படுகிறது. இதனை போக்க ஒவ்வொருவரும் வெவ்வேறு செயல்களில் ஈடுபடுவது உண்டு.

அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் மன அழுத்தத்தை போக்க, மார்ட்டி நகரில், அழுகை அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அழுகை அறையில் நுழைந்து அழுக எனக்கும் கவலை இருக்கிறது போன்ற வாக்கியங்கள் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த அழுகை அறையின் சிறப்பு என்னவென்றால், மன அழுத்தத்துடன், கவலையுடன் வரும் மக்கள் அங்கு வருகை தருகின்றனர். தாங்கள் யாரிடம் மனம்விட்டு அழ வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களை அலைபேசி வாயிலாக பேசிக்கொள்ளலாம். அதே போல் அங்குள்ள உளவியல் நிபுணர்களிடம் தங்களது மனதில் உள்ளவற்றை கொட்டி தீர்த்துவிடலாம்.

மனம் விட்டு பேச ஆள் இல்லாமல் தவிக்கும் மக்களின் மனஅழுத்தத்தை போக்க, உளவியல் நிபுணர்கள் இணைந்து இந்த அழுகை அறையை உருவாக்கி இருக்கிறார்கள். மேலும், ஸ்பெயினில் பத்தில் ஒருவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மக்களின் மனநல பாதுகாப்பிற்காகவே ஸ்பெயின் அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. தற்போது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அழுகை அறைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

மக்களின் மன அழுத்தத்தை போக்க ஸ்பெயின் நாட்டில் அழுகை அறை அறிமுகம் | World News Depression Crying Room