அமெரிக்க டிவி சேனலில் வானிலை அறிக்கையின்போது ஒளிபரப்பான ஆபாச வீடியோ - மக்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் டிவி சேனல் ஒன்றில் வானிலை அறிக்கையின் போது ஆபாச வீடியோ வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள தனியார் டிவி சேனல் ஒன்றில் செய்தியாளர் வானிலை அறிக்கையை படித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆபாச வீடியோ ஒன்று ஒளிபரப்பானது.

இந்த வீடியோ ஒளிப்பரப்பானது அந்த சேனலுக்கு முதலில் தெரியவில்லை. பின்னர் கண்டதையடுத்து, அந்த வீடியோ உடனே நிறுத்தப்பட்டது. சுமார் 13 வினாடிகள் அந்த ஆபாச படம் ஒளிபரப்பானதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தாலும், இந்த நிகழ்வு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சேனலில் ஒளிப்பான ஆபாச வீடியோவை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

பெரும்பாலோர் தங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் செய்தியை பார்த்து கொண்டு இருந்தபோது இதுபோன்ற ஆபாச காட்சிகளை காட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்