மெக்சிகோவில் இந்தியப்பெண் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை : வெளியான அதிர்ச்சி தகவல்

மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒன்றில் இந்தியா மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த பெண்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வட அமெரிக்காவில் மெக்சிக்கோ அமைந்துள்ளது. மெக்சிக்கோவில் உள்ள Tulum நகரம் சுற்றுலாத்தளமாக விளங்கி வருகிறது. இந்த சுற்றுலாத்தளத்தில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து பயணிகள் சுற்றுலாவிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று சாலையோர உணவகத்திற்கு அருகே இரு கும்பலுக்கிடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டது. அப்போது அந்த மோதலில், திடீரென்று அந்த கும்பல் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் உணவகத்தில் அமர்ந்திருந்த சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கிக் குண்டுகள் சீறிப் பாய்ந்தது.

அந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் சான் ஜோஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் 2 நாட்களுக்கு முன்பு தான் இந்த நகருக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த 2 பேர் ஜேர்மனியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களைப் பற்றி எந்த ஒரு விவரமும் தெரியவில்லை என்றும் அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

தாக்குதலில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய நடத்திய விசாரணையில், போதைப் பொருள் விற்பனைக்காக நடந்த மோதலில் இரு தரப்பினரிடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்