லண்டனில் 8 பேர் கொண்ட கும்பலால் ஆப்கான் இளைஞன் துடிதுடிக்க கொடூரக் கொலை - அதிர்ச்சி சம்பவம்
லண்டனில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதியான 18 வயது இளைஞரை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் உள்ள நாட்டிங் ஹிலில் வசித்து வந்த ஹஜ்ரத் வாலி (18). இவர் கடந்த 12-ம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணியளவில் ட்விக்கன்ஹாம்-வில் உள்ள தேம்ஸ் மீது ரிச்மண்ட் கல்லூரிக்கு அருகில் இருக்கும் கால்பந்து மைதானத்தில் 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
இந்த கொடூர தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு விசாரணை புல்ஹாம்-ல் உள்ள மேற்கு லண்டன் கரோனர் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
அப்போது, ஹஜ்ரத் வாலியின் மூத்த சகோதரர் உடலை அடையாளம் கண்டதாக கூறியதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முழு பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வராத நிலையில், விசாரணையில் உயிரிழந்தது ஹஜ்ரத் வாலி தான் என்பதை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஹம்மீர் ஸ்மித்-ஐ சேர்ந்த 16 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட காரணங்களுக்காக தற்போது அந்த இளைஞன் குறித்த முழு விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
