படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுமி - உச்சி வெயிலில் கட்டிப்போட்டு சித்ரவதை - அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
உடல் நலமில்லாத சிறுமி படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக கொளுத்தும் வெயிலில் நாயை போல கட்டிப்போட்டு கொலை செய்ததாக ஜேர்மன் பெண் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெனிபர் வெனிஷ் (27) என்ற பெண் ஐ.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். இவருடைய கணவர் தாஅல் ஜமால்ய்லி. யாஸிடி இனப்பெண் ஒருவரை விலைக்கு வாங்கி அடிமைகளாக தனது வீட்டில் வைத்து வேலை வாங்கி வந்தார்.
இந்நிலையில், அந்த சிறுமி தனது படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக ஜமால்ய்லி, அந்த சிறுமியை கொளுத்தும் வெயிலில் சங்கிலியால் கட்டி போட்டுள்ளார். அப்போது, அந்த சிறுமி தாகத்தால் கதற, அவளுக்கு தண்ணீர் கூட குடிக்கக் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். அந்த சிறுமியின் தாய் அவர்கள் காலில் விழுந்து கதறியபோது அவரை காலால் எட்டி உதைத்துள்ளார் ஜமால்ய்லி.
இதனையடுத்து அச்சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனாள். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜமால்ய்லியையும், ஜெனிபரையும் கைது செய்தனர். வழக்கு விசாரணையில், போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், கணவர் அந்த சிறுமியை தண்ணீர் கொடுக்காமல் சாகவிட்டபோது உடனிருந்ததற்காகவும், ஜெனிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டத்தின்படி, போர்க்குற்றவாளிகள் எங்கு குற்றம் செய்திருந்தாலும், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் விசாரிக்கப்படலாம் என்பதால் ஜெனிபருக் கு முனிச் நகரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஜமால்ய்லுக்கு அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்லாமிய மதத்திற்கு மாறி, ஐ எஸ் அமைப்பில் சேர்ந்த ஜெனிபர், அந்த அமைப்பில் பெண்களின் உடைக் கட்டுப்பாடுகள், பொது இடத்தில் நடந்துகொள்ளும் முறை, மற்றும் மது மற்றும் புகையிலை பயன்பாட்டைத் தடுத்தல் ஆகிய பொறுப்புக்களை, AK-47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி முதலான ஆயுதங்கள் ஏந்தி கண்காணிக்கும் பொறுப்பை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
