உலகில் விலையுயர்ந்த சாக்லேட்: 50 கிராம் எவ்வளவு தெரியுமா?
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த சாக்லேட் பற்றிய முழுத்தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகில் விலையுயர்ந்த சாக்லேட்
உலகிலேயே மிகவும் அதிக விலையில் விற்கப்படும் சாக்லேட் டோ ஆக் எனப்படுகின்றது. இது 50 கிராமின் விலை ரூபா 3,850 இற்கு விற்கப்படுகின்றது.
இது தான் பல பணக்காரர்கள் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டாக உள்ளது. இதற்கு இதன் தனித்துவமான சுவையும் ஒரு காரணமாகும். இந்த சாக்லேட் செய்ய தேவையான கோகோவை பழங்காழ நேஷனல் கோவா மரங்களில் இருந்து எடுக்கிறார்கள்.
இந்த மரங்களில் சிலவை கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலானவை என்பதால் மக்களால் இதன் சுவை தனித்துவமாக அறியப்படுகின்றது.
இந்த சாக்லேட் செய்ய வெறும் 2 பொருட்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவை 78% கோவா பீன்ஸ் மற்றும் கருப்பு சக்கரையாகும். இந்த கோவா பீன்ஸ் மிகவும் கவனமாக கைகளால் எடுக்கப்பட்டு புளிக்கவைக்கப்படுகின்றது.
சமார் 4 ஆண்டுகள் வரை இதை பீப்பாய்களில் ஒயின் போல பழுக்க வைக்கிறார்கள். இந்த சாக்லேட் தயாரிக்கப்படதன் பின் நேர்த்தியான கைவினை கலஞர்களால் செய்யப்பட்ட ஸ்பானிஸ் எல்ம் மரப்பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இது ஒரு வேறுவிதமான அனுபவத்தை கொடுப்பதாக சாப்பிடுபவர்கள் கூறுகிறார்கள். இதன் காரணாக இதை பல பிரபலங்களால் விரும்பி உண்ணப்படுகின்றது.