வானிலிருந்து கொட்டிய அதிசய ‘மீன் மழை’ - ஆச்சரியத்தில் வியந்துபோன மக்கள் - வைரலாகும் படங்கள்

viral photos miracle fish rain
By Nandhini Jan 04, 2022 07:04 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

வானிலிருந்து மழைத் துளிகளுக்கு மாறாக, வானிலிருந்து மீன்கள் மழை போல விழுந்தால், மக்கள் ஆச்சரியத்தில் வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்கள்.

உலகின் பல மூலை முடுக்குகளில் பல விநோதமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வானிலிருந்து அதிசயமாக ‘மீன் மழை’ பொழிந்துள்ளது.

நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் உள்ளது. ஆனாலும், இது உண்மைதான், நிஜத்திலேயே மீன்கள் மழை போல பொழிந்துள்ளது.

இப்படி ஒரு சம்பவத்தை இதற்கு முன் கேள்விப்பட்டிருந்தாலும் கூட மிக மிக அரிதிலும் அதிதான நிகழ்வாக இது உள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டெக்ஸார்கானா எனும் பகுதியில் கடந்த டிசம்பர் 30ம் தேதி தான் இந்த அதிசயம் நடைபெற்றுள்ளது.

வானிலிருந்து மீன்கள் மழையுடன் சேர்ந்து விழுந்துள்ளன. இதைப் பார்த்த மக்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தனர். விலங்குகள் மழை போல வருவது அறிவியல்பூர்வமாக நடக்கக் கூடிய ஒன்று தான்.

சிறிய தண்ணீர் ஜீவராசிகளான தவளைகள், நண்டுகள், சிறிய மீன்கள் போன்றவை காற்றழுத்தத்தால் நீர்நிலைகளிலிருந்து இழுக்கப்பட்டு அவை அதே பகுதிகளில் மழைத்துளிகளுடன் சேர்ந்து மழை போல நிலப்பரப்பில் பொழியும். ஆனால் இது மிகவும் அரிதாக நடக்கக் கூடிய ஒன்றாகும்.

இதற்கு முன்னர் கலிபோர்னியா , வடக்கு செர்பியா போன்ற பகுதிகளில் மீன் மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த மீன் மழை குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், மீனின் அளவை காட்டும் வகையில் அதன் அருகே நின்று கொண்டு ஒருவர் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

இன்னும் சிலரோ இறந்து போன மீன்களை அப்புறப்படுத்தாவிட்டால் சுகாதாரக்கேடு ஏற்படும் என்று பதிவிட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்பாக மீன் மழை வந்தது என நான் கூறியபோதெல்லாம் என்னை பைத்தியம் போல பார்த்தார்கள். ஆனால், இன்று நான் அவர்களை ஏளனமாக பார்த்துவிட்டு சென்றேன் என்று ஒருவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.