உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு ஏன் மோடி பெயர் வைக்கப்பட்டதுன்னு தெரியுமா?
உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு ஏன் பிரதமர் மோடியின் பெயர் வைக்கப்பட்டதற்கான காரணத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் இன்று பகலிரவு டெஸ்ட்டாக ஆமதாபாத்தில் இன்று முதல் தொடங்கியிருக்கிறது.
இந்த தொடரில் மொத்தம் 4 ஆட்டங்கள். இந்தத் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளதால், 2-வது வெற்றிக்கான இரு அணிகளுமே தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. முதல் 2 தொடர் டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. 3-வது டெஸ்ட் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளன.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக்கொண்டு வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 227 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்திருக்கிறது.
உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் எனப் பெயர் பெற்றிருக்கும் சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மைதானத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். மோடி மைதானத்தின் தொடக்க விழாவில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா, இந்த மைதானத்துக்கு நமது பிரதமர் மோடியி பெயர் சூட்ட முடிவு செய்திருக்கிறோம். இது அவருடைய கனவு மைதானமாகும் என்றார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசுகையில், குஜராத் முதல்வராக மோடி இருந்த போது இந்த மைதானம் கட்டுவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அப்போது குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் அவர் இருந்தார் என்றார்.