இன்று தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

M K Stalin
By Thahir Nov 16, 2022 08:18 AM GMT
Report

இன்று தேசிய பத்திரிக்கையாளர்கள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை நடக்கும் உண்மைகள் அறத்தின் நிழலாய் நின்று எடுத்துரைக்கும் பத்திரிக்கையாளர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து | World Journalist Day Cm Mk Stalin Wishes

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்!

அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு தேசிய பத்திரிக்கையாளர் தின வாழ்த்துகள்!

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு’ என பதிவிட்டுள்ளார்.