இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - லெபனானில் கொடுத்து கொத்தாக மடிந்த உயிர்கள்!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லெபனான்
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.மேலும், இஸ்ரேலிலிருந்து 251 பேரைப் பணய கைதிகளாக சிறைப்பிட்க்கபட்டனர்.
இந்த சுழலில் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பினர் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
தாக்குதல்
இந்த மூன்று அமைப்புகள் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் தக்க பதிலடி தாக்குதல் கொடுத்து வருகிறது. அதன்படி,நேற்று லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட இதுவரை மொத்தம் 2 672 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.