ஓமைக்ரான் வைரஸ் : கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை!

ஓமைக்ரான் வைரஸ் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தென்னாபிரிக்காவில் தற்பொழுது கொரோனா வைரஸ் உருமாறி அதிக வீரியமுள்ள வைரசாக பரவி வருகிறது.

இதனால் உலக மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த வைரஸுக்கு ஓமைக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் டெல்டா வைரஸ் போலவே அதிகளவில் பரவி ஆபத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென்ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த வைரஸ் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு இந்த ஓமைக்ரான் வைரஸ் விரைவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.

எனவே கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்