இறந்தவர்கள் கனவில் வரும் மர்மமான மூளை நோய் - மருத்துவர்கள் அதிர்ச்சி
நியூயார்க் டைம்ஸின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கனடாவின் நியூ பிரன்சுவிக் நகரில் மர்மமான மூளை நோய் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மூளை தாக்குதல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கனவுகளில் இறந்தவர்களைப் பார்ப்பதாக சொல்லப்படுகிறது. இது கனடா மக்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நோய்க்கான காரணத்தை கண்டுபிடிக்க நரம்பியல் நிபுணர்கள் இரவும் பகலாக உழைத்து வருகின்றனர். செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு மூலம் இந்த நோய் பரவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இந்த நோய்க்கு காரணம் கோவிட் தடுப்பூசி தான் என்றும் பல விஞ்ஞானிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நோய்க்கு எந்தவித ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த மூளை நோய் 6 ஆண்டுகளுக்கு முன்பே கனடாவில் பரவ தொடங்கி உள்ளது. முதலில் 12 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். இந்நோயால் 6 பேர் இறந்தனர்.
15 மாதங்களாக உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் சிக்கித் தவித்து வருகிறது. கனடாவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்நோயை மறந்து கொரோனா பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். தற்போது மீண்டும் இந்நோயின் வீரியம் அதிகரித்துள்ளது.
6 ஆண்டு கால ஆகியும் இன்னும் இந்த நோய்க்கு பெயரை கூட விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நோய் சுற்றுச்சூழலால் ஏற்படுகிறதா? அல்லது இது மரபணு தானா? அல்லது மீன் அல்லது மான் இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் பரவுகிறதா? என்ற பல கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், இதற்கான கேள்விக்கு எந்தவிதமான பதிலும் இல்லை.