சீன ஆய்வகத்தில் வௌவால்கள்... அதிகாரப்பூர்வ வீடியோ வெளியானது

world-india
By Nandhini Jun 15, 2021 01:31 PM GMT
Report

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் உயிருள்ள வௌவால்கள் இருந்தது உண்மை என்று ஆதாரப்பூர்வமான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. 

இந்த வீடியோவை ஆஸ்திரேலிய தொலைக்காட்சியாகிய ஸ்கை நியூஸ் ஆஸ்திரேலியா வெளியிட்டிருக்கிறது. 

உயிருள்ள வௌவால்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள காட்சியை அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோ உண்மையாகவே வுஹான் ஆய்வகத்தில் எடுக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால், கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்துதான் பரவியது என்ற பல நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு கூடுதல் பலம் கிடைத்து விடும்.

சீன ஆய்வகத்தில் வௌவால்கள்... அதிகாரப்பூர்வ வீடியோ வெளியானது | World India

அத்துடன், உலக சுகாதார மையத்தின் சார்பில் வுஹான் ஆய்வகத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு உயிருள்ள வௌவால்கள் இல்லை என்று வலியுறுத்திய பீட்டர் தாஸ்ஸாக் என்பவரின் கருத்துக்கள் முரண்படும்.

கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டறிவதற்காக சீனா சென்ற உலக சுகாதார அமைப்பின் விசாரணை அதிகாரிகள் குழுவில் ஒருவரான பீட்டர் தாஸ்ஸாக், கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து பரவியது என்ற கருத்தை நிராகரித்து, இனி இது தொடர்பாக எந்தவிதமான ஆய்வுகள் மேற்கொள்ளத் தேவையில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

சீன ஆய்வகத்தில் வௌவால்கள்... அதிகாரப்பூர்வ வீடியோ வெளியானது | World India

ஆனால், அமெரிக்க உளவுத்துறையோ, கொரோனா வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியது என்பதற்கு போதுமான அளவில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.