இளவரசர் ஹாரி- மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது - அசர வைத்த குழந்தையின் பெயர்!
மீண்டும் கர்ப்பமடைந்த ஹாரி தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரியும், பிரபல நடிகையுமான மேகனும் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் கடந்த ஆண்டு அரசு குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்த ஹாரி தம்பதி கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களுக்கு, ஏற்கெனவே ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறையாக கருவுற்றிருந்தார் மேகன். தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஹாரி- மேகன் தம்பதியர் தங்களுடைய இரண்டாவது குழந்தைக்கு லில்லிபெட் டயானா மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று பெயர் சூட்டியுள்ளனர். இதில் டயானா என்பது ஹாரியின் தாயார் பெயர். லில்லிபெட் என்பது ராணி எலிசபெத்தை சிறுவயதில் அழைத்த பெயராகும்.
