இந்தியாவிற்கு உதவ உலகநாடுகள் தவறிவிட்டன - அமெரிக்க மருத்துவர் அந்தோணி ஃபௌசி
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி பாதிப்புகள் மற்றும் மரணங்கள் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன.
கொரோனா பரவல் அதிகரிப்பால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசு கொரோனாவை கையாண்ட விதத்திற்கு சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே சமயம் பல்வேறு நாடுகளும் உதவ முன்வந்துள்ளன.

இதில் அமெரிக்க அரசு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எங்கள் நாட்டில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது இந்தியா செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிற்கு உதவ உலகநாடுகள் தவறிவிட்டன என அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரான அந்தோணி ஃபௌசி தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான நேரத்தில் சர்வதேச அளவில் உலக நாடுகள் இணைந்து செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்ய தவறிவிட்டன என்றுள்ளார்.
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil