அமெரிக்காவில் பயங்கரம் - பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது மாணவன் - 3 மாணவர்கள் பலி

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டை அப்பள்ளியை சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவர் தான் நிகழ்த்தி இருக்கிறார். பள்ளி வளாகத்துக்குள்ளேயே தானியங்கி துப்பாக்கியால் அவர் தனது சக மாணவர்களை சுட்டிருக்கிறார்.

5 நிமிட இடைவெளியில் சுமார் 20 முறை அவர் சுட்டத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆசிரியர் உள்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரை கைது செய்தனர். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்