வறட்சியால் கொத்து கொத்தாக மடியும் ஒட்டகச் சிவிங்கிகள் - அதிர்ச்சி புகைப்படம்
கென்யாவில் நிலவி வரும் கடும் வறட்சியால், ஒட்டகச் சிவிங்கிகள் கொத்து கொத்தாக செத்து மடிந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிழக்கு ஆப்க்கா நாடான கென்யாவில் காலநிலை மாற்றம் காரணமாக, பருவமழை வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவாக பெய்திருக்கிறது.
இதனால், நீர்நிலைகள் வற்றி, வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால், நீர் இல்லாமலும், உணவு இல்லாமலும் வனவிலங்குகள் செத்து மடியும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் 6 ஒட்டகச் சிவிங்கிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது - வறட்சியால் வனவிலங்குகள் உயிரிழப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சமீபத்தில் வறண்ட நீர்நிலை ஒன்றில் தண்ணீர் இல்லை. இதனால், அதன் மையப்பகுதிக்கு 6 ஒட்டகச் சிவிங்கிள் சென்றுள்ளன.
அதன் கால்கள் களிமண்ணில் புதைந்து விட்டதால், அவற்றால் வெளியே வர முடியவில்லை. இதனால், உணவின்றி கிடந்து சில நாட்களில் அவை இறந்து விட்டன. நீர்நிலை மாசுபடக் கூடாது என்பதற்காக, அவை அப்புறப்படுத்தப்பட்டு, வேறிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அந்தப் புகைப்படங்கள்தான் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது இவ்வாறு அவர் கூறினார். கென்யாவில் மட்டும் 4,000 ஒட்டகச் சிவிங்கிகள், வறட்சி காரணமாக இறக்கும் ஆபத்தில் இருப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.