வெடித்து சிதறிய 'ராட்சஸ' நட்சத்திரம் - பால்வழி அண்டத்தில் உருவான பாதிப்புகள் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி

world scattered giant star exploded Scientists shocked big red star sun exploded
By Nandhini Jan 17, 2022 06:02 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர்-16ம் தேதி உலக அளவில் உள்ள வானியலாளர்கள் சூரியனை விடவும் 10 மடங்கு பெரிதாக இருக்கும் பிரமாண்டமான சிவப்பு நட்சத்திரம் ஒன்றை கண்டுபிடித்தார்கள். அந்த நட்சத்திரம் வெடிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர். இது பூமியிலிருந்து சுமார் 120 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்துள்ளது.

இது வெடிக்க இருப்பதை நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் அறிந்து கொண்டார்கள். அதன்படி, இந்த ராட்சத சிவப்பு நட்சத்திரம் தனது இறுதி நிலையை அடைவது கண்டுபிடித்தனர்.

அதுமட்டுமல்லாமல், இதன் வெடிப்பானது சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கிரகத்தின் சுற்று பாதை வரை தாக்கி உள்ளதையும் கண்டுபிடித்தார்கள்.

நியான் மற்றும் ஆக்சிஜன் ஆகிய வாயுக்களின் கலப்பினால் பெரும் வெடிப்பை இது ஏற்படுத்தி கொண்டது. மேலும் இதன் இறுதி கட்டத்தில் சிலிக்கான் வாயு மூலமாகவும் பெரும் வெடிப்பு நிகழ்ந்தது என கூறப்படுகின்றது.

கடைசியில் இந்த ராட்சத சிவப்பு நட்சத்திரம் விஞ்ஞானிகள் கூறியது போல் வெடித்து சிதறி இருக்கிறது. இந்த பெரு வெடிப்பானது மிக பெரிய அளவில் நடைபெற்றுள்ளது. இந்த வெடிப்பில் ஏராளமான வாயுக்கள் வெளியாகி இருக்கிறது.

அதோடு, பால்வழி அண்டத்தில் பல்வேறு விதமான மாறுதல்களையும் இது ஏற்படுத்தி இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, கருப்புதுளை என்று கூறப்படும் அறிவியல் கூற்றுடன் இது ஒத்துப் போய் இருக்கிறது.

இந்நிகழ்வின் மூலமாக கோள்கள் அல்லது நட்சத்திரங்கள் தனது வாழ்நாளை முடித்து கொள்வதற்கு இது போன்ற பெரும் வெடிப்பை நிகழ்த்தக் கூடும் என்பதை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதை ஆய்வாளர்கள் சூப்பர் நோவா-2 என்ற முறையில் குறிப்பிடுகிறார்கள். இது போன்ற பல்வேறு பெருவெடிப்புகள் அவ்வப்போது நடந்துக் கொண்டு தான் உள்ளது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதிரியான பெரும் வெடிப்புகள் பூமிக்கு பக்கத்தில் வராத வரை மனித இனத்திற்கு எந்த பாதிப்புகளும் கிடையாது.

மேலும், இதுகுறித்து பல ஆய்வுகள் தினமும் நடைபெற்று வருகின்றன. இவற்றின் மூலம் எதிர் காலத்தில் இது போன்ற பெரும் ஆபத்து பூமிக்கு வந்தால், அதனை எப்படி சமாளிப்பது என தெரிந்து கொள்ளலாம்.

இதற்காக நாசா போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் பல கோடி மதிப்பில் ஏராளமான செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.