1000 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் வைர பேட்டரி - விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு
1000 ஆண்டுகளுக்கு மேலாக உழைக்கும் பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கார்பன் 14
UK அணுசக்தி ஆணையம் (UKAEA), பிரிஸ்டல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலகின் முதல் கார்பன்-14 வைர பேட்டரியை உருவாக்கியுள்ளது.
கார்பன்-14 அரை ஆயுட்காலம் 5,400 ஆண்டுகள் என்பதால், இந்த பேட்டரியானது 1000 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும். 1000 ஆண்டுகளுக்கு பிறகும், பேட்டரி அதன் ஆற்றலில் பாதியைத் தக்க வைத்துக் கொள்ளும்.
எலக்ட்ரான் கசிவு
தொல்லியல் ஆய்வுகளின் போது கிடைக்கும் பொருள்களின் காலத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் கார்பன்-14 என்ற தனிமத்தின் கதிரியக்க சிதைவைக் கொண்டு மின்சாரத்தை உருவாக்குகிறது.
இந்த செயல்முறையானது, சோலார் பேனல்கள் ஒளியை மின்சாரமாக மாற்றுவதைப் போல், கதிரியக்க சிதைவிலிருந்து வேகமாக நகரும் எலக்ட்ரான்களை மின்சாரமாக தருகிறது.
இந்த கார்பன்-14 வைரத்திற்கு நடுவில் வைக்கப்படுவதால் இது எலக்ட்ரான் கசிவதை தடுக்க உதவும். கதிரியக்க கதிர்வீச்சை வைரம் உறிஞ்சிக்கொள்வதால் பாதுகாப்பான முறையில் நீண்டநாள்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி
இந்த பேட்டரியானது நிலையான மற்றும் பாதுகாப்பான மாற்று சக்தியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த பேட்டரிகள் மருத்துவம், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் பயன்படும் என கூறப்படுகிறது. மேலும், இந்த பேட்டரியானது அணுக்கழிவைக் கையாள்வதற்கான பாதுகாப்பான வழியையும் வழங்குகிறது.

ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை IBC Tamil
