பிரித்தானிய அரச குடும்பத்தில் இன்னொரு "எலிசபெத்" - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

world-elizabeth-news
By Nandhini Oct 03, 2021 03:34 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பிரித்தானிய இளவரசியும், ஐக்கிய ராஜ்யத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியுமான பீட்ரைஸின் மகளுக்கு புதிய பெயர் ஒன்று மகாராணியாரின் பெயருடன் சேர்த்து சூட்டப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் மற்றும் எடோர்டா மாபெல்லி மோஸ்ஸி தம்பதியருக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 11.42 மணி அளவில் லண்டனில் உள்ள செல்சியா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் சுமார் 2.7 கிலோ எடையுடன் ஒரு பெண் குழந்தை ஆரோக்கியமாக பிறந்தது.

இந்நிலையில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் அந்தப் பெண் குழந்தைக்கு "சியன்னா எலிசபெத் மாபெல்லி மோஸ்ஸி" என்ற பெயர் வைத்துள்ளனர். இத்தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குழந்தை சியன்னா எலிசபெத்தின் கால் அச்சுடன் கூடிய புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும், மகாராணி 2ம் எலிசபெத்தின் 12-வது கொள்ளுப் பேத்தியான சியன்னா, அவரது தாய் பீட்ரைஸ்-க்கு பிறகு 11-வது இடத்தில் சிம்மாசனத்தில் இருக்கிறார்.