மகாராணி 2ம் எலிசபெத் திடீரென மருத்துவமனையில் அனுமதி : உடல்நிலை குறித்து வெளியான தகவல்

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் (95) சமீபத்தில் வடக்கு அயர்லாந்து பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், இறுதியில் அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வடக்கு அயர்லாந்திற்கான பயணத்தை ரத்து செய்த பின்னர் ராணி மருத்துவமனையில் ஒரு இரவை கழித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து செய்தி தொடர்பாளர் கூறுகையில், மகாராணியார் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், கடந்த புதன் கிழமை பிற்பகல் வழக்கமான சோதனைகளுக்காக, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவனையில் இருந்தார் என்றும், இன்று மதியம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்கு திரும்புவார் என்றும் கூறியுள்ளார். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்