காணாமல் போகும் கானகத்தின் வேர்கள் : யானைகள் தின சிறப்பு தொகுப்பு

Elephant
By Irumporai Aug 12, 2022 10:11 AM GMT
Report

உலகளவில் இன்று ஆக:12 ல் "சர்வதேச யானைகள் தினத்தை  பலரும் கொண்டாடி வருகின்றனர். யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்று இந்தியாவிலும் "யானைகள் தினம்" கொண்டாடப்பட்டு வருகின்றது.

யானைகள் தினம்

உலகில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய வகை யானைகள் என இரண்டு வகைகள் உள்ளது. கடந்த, 2017 ஆம் கணக்கெடுப்பின்படி, ஆசியாவிலுள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கை 27 ஆயிரத்து, 312 ஆக உள்ளது .

காணாமல் போகும் கானகத்தின் வேர்கள் : யானைகள் தின சிறப்பு தொகுப்பு | World Elephant Day 2022 History

யானைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதால் அதனை அரியவகை விலங்குகள் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு சட்டத்தில் திருத்தங்கள் சிலவற்றை கொண்டுவந்துள்ளது.

இறக்கும் யானைகள்

அந்த சட்டத்தின் படி யானைகளை வாங்கவும் விற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்து வருகிறது.

உதாரணமாக ரயில் மோதி, மின்சாரம் தாக்கி, தந்தத்திற்காக வேட்டையாடுதல் போன்ற பல காரணங்களால் உயிரிழந்து வருகிறது. இதனையடுத்து மத்திய அரசின் திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் யானைகளை பாதுகாப்பதற்காக 212.5 கோடிகள் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

யானைகள் அழிந்தால் அதனை சார்ந்த காடுகள், விலங்குகள் மற்றும் மனித இனமே அழிவை நோக்கி செல்லும் என சொல்லப்படுகிறது. இதனால் யானைகளை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.