வெள்ளை மாளிகையில் தன் மனைவியுடன் தீபாவளியை கொண்டாடிய அமெரிக்க அதிபர்

world-diwali-celebrate-joe-biden
By Nandhini Nov 05, 2021 05:10 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அமெரிக்க வெள்ளை மாளிகையில் தனது மனைவியுடன் குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், இருளில் இருந்து ஞானம், பிரிவில் இருந்து ஒற்றுமை, ஏமாற்றத்தில் இருந்து நம்பிக்கை ஆகியவற்றை தீபாவளி திருநாள் நமக்கெல்லாம் நினைவுப்படுத்துகிறது என்றார்.

துணை அதிபர் கமலா ஹாரிஸூம் உலகம் முழுவதும் தீபாவளியை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி, நியூயார்க்கில் புகழ்பெற்ற கட்டடிடங்கள் முதல் முறையாக மின்னொளியில் ஜொலித்தன. மேலும், தீபாவளியை கொண்டாடும் விதமாக ஹட்ஸன் நதியின் இருகரைகளிலும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. 

வெள்ளை மாளிகையில் தன் மனைவியுடன் தீபாவளியை கொண்டாடிய அமெரிக்க அதிபர் | World Diwali Celebrate Joe Biden