சீனாவின் மிக வயதான மூதாட்டி 135-வது வயதில் உயிரிழந்தார்

world-death-135-years-old-lady
By Nandhini Dec 19, 2021 10:09 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சீனாவின் மிக வயதான நபரான அலிமிஹான் செயிதி உடல்நலக்குறைவு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங்கின் கஷ்கர் நகரை சேர்ந்த அலிமிஹான் (135). 1886ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். கடந்த 2013-ம் ஆண்டு அலிமிஹான் தான் சீனாவின் மிக வயதான நபர் என்று சீனா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மரணம் அடையும் வரையில் எளிய வாழ்க்கை வாழ்ந்தார் அலிமிஹான். நேரத்திற்கு சரியாக சாப்பிட்டு விடுவார். சூரிய ஒளியில் அடிக்கடி அமர்வது அவரது ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் என்று ஒரு நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.

அவர் வசித் கொமுசெரிக் பகுதி, மிக வயதானவர்கள் வாழும் இடமாக கருதப்படுகிறது. இங்கு 90 வயதை தாண்டியும் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு சுகாதார சேவைகள் சிறப்பாக வழங்கப்படுவதே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

இப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ சேவை, ஆண்டுதோறும் உடல் பரிசோதனை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.