உலககோப்பை தொடரில் இந்த அணிதான் நமக்கு பெரும் தலைவலி – கம்பீர் எச்சரிக்கை
உலகக் கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி துவங்கப்பட்டது நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை டி20 தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் பட்டியலை அண்மையில் வெளியிட்டது.
இந்நிலையில் உலக கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணியை சாதாரணமாக மற்ற அணிகள் எடை போட்டுவிடக் கூடாது என்று கௌதம் கம்பீர் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியலை பார்த்தால் பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான், ஹபீஸ், என நட்சத்திர பேட்டிங் வீரர்கள் அணிவகுத்து உள்ளனர். பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்ரிடி பெயர் இடம் பெற்றுள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சுவிங் செய்யக்கூடிய ஆற்றல் உடையவர்.
உயரமான அவர் மிக அற்புதமான பவுன்சர் பந்துகளை போடக் கூடிய திறமை படைத்தவர். ஹாரிஸ் ரஊப் 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக பந்துகளை வீசக்கூடிய பந்துவீச்சாளர். மேலும் ஒருசில உருவங்கள் வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், சம பலத்துடன் பாகிஸ்தான் அணி விளங்குவதாக கம்பீர் கூறியுள்ளார்.
இந்த இரு அணிகளுக்கு இடையே இந்த குறிப்பிட்ட ஐசிசி சர்வதேச தொடர் போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. தற்பொழுது மீடியாக்கள் இந்திய அணி மீது நெருக்கடி உள்ளதாகவும், பாகிஸ்தான் அணி இந்திய அணியை விட சிறந்த அணியாக திகழ்கிறது என்பதை போல் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் எப்பொழுதும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியை விட ஒரு படி மேலே இருக்கும் என்றும் பாகிஸ்தான் அணியை எப்படி கையாள வேண்டும் என்கிற யுக்தி இந்திய அணிக்கு நன்றாக தெரியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை டி20 தொடரில் இந்த இரு அணிகளும் மோத இருக்கும் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.