வாள் தூக்கி நின்னான் பாரு : மாஸ் காட்டிய ரோகித் ,ராகுல் ஆப்கானிஸ்தானுக்கு 211 ரன்கள் இலக்கு

T20WorldCup INDvAFG
By Irumporai Nov 03, 2021 04:46 PM GMT
Report

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா 210 ரன்கள் குவித்துள்ளது .

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன

.இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது .அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - கே.எல்ராகுல் களமிறங்கினர் .

இதில் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அப்போது அணியின் ஸ்கோர் 140 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 74 ரன்னில் வெளியேறினார் .

அடுத்ததாக கேஎல்.ராகுல் 69 ரன்னில் ஆட்டமிழந்தார் .இதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடினர்.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது .இதில் ஹர்திக் பாண்டியா 35 ரன்னும், ரிஷப் பண்ட் 27 ரன்னும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர் .

தற்போது களமிறங்கியுள்ள ஆப்கானிஸ்தான் அணி 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது