உலகக் கோப்பையில் தோல்வி : கலவரமான பாரிஸ் .. உஷார் நிலையில் போலீசார்
கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையில் பிரான்ஸ் அணி தோல்வியை தழுவியதால் பிரான்சின் பல இடங்களில் கலவரங்கள் வெடித்தன.
அர்ஜென்டினா வெற்றி
பிஃபா கால்பந்து இறுதி போட்டியானது பிரான்ஸ் அணிக்கும் அர்ஜெண்டினா அணிக்கும் நடைபெற்றது. இதில் பெனால்டி முறையில் நடந்த டை -பிரேக்கரில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையினை கைபற்றியது அர்ஜெண்டினா.
Riots erupt in #France after the defeat of the national team in the final of the World Cup. pic.twitter.com/HH2efgzyRf
— NEXTA (@nexta_tv) December 18, 2022
இந்த தோல்வியை அடுத்து பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
கலவரமான பாரிஸ்
பல பிரெஞ்சு நகரங்களின் தெருக்களில் மோதல்கள் வெடித்ததால், கலவரத்தை அடக்க பிரெஞ்சு போலீசார், கால்பந்து ரசிகர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
பாரிஸ் நகரின் சில தெருக்களில், கலவரத்தின் வீடியோக்களையும் படங்களையும் சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 14,000 காவல்துறையினர் பாதுகாப்பிற்காக கலவரம் நடந்த இடத்தில் குவிக்கப்பட்டதாகவும், சில ரசிகர்களை கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.