உலகக் கோப்பை: INDvAUS - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 28 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனையடுத்து 200 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்தியா வெற்றி
இதனால் மீண்டும் ஒரு மோசமான தோல்வியை இந்தியா பெற்றுவிடுமோ என்ற பீதி ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் பின்னர் இணைந்த விராட் கோலி - கேஎல் ராகுல் இணை ஆஸ்திரேலிய பவுலர்களை துவம்சம் செய்தனர்.
இதன் காரணமாக இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 97 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தார். உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே இந்தியா வென்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.