உலகக்கோப்பை ஹாக்கி போட்டி- பயிற்சி முகாமுக்கு தேர்வான தமிழருக்கு பாராட்டு!
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள இளம் தமிழக வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் தகுதி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 20 வயது இளம் ஹாக்கி வீரரான மாரீஸ்வரன் சக்திவேல், கடந்த ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு தேர்வானார்.
இதனை தொடர்ந்து ஜூனியர் ஆண்கள் உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான பயிற்சி முகாமுக்கு தேர்வாகி இருக்கும் மாரீஸ்வரனை, நாடாளுமன்ற எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும், அவர் பயிற்சி பெற தேவையான உபகரணம்ங்களை வழங்கி மாரீஸ்வரனை ஊக்கப்படுத்தினார்.