உலகக் கோப்பை 2023: போட்டி நேரம், சேனல் - இலவசமாக பார்ப்பது எப்படி?
உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நாளை முதல் தொடங்கவுள்ளது.
உலகக்கோப்பை
இந்தியாவில் உள்ள பத்து மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும். அக்டோபர் 5ஆம் தேதி நடக்க உள்ள 2023 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
இந்திய அணி அக்டோபர் 8 அன்று முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆட உள்ளது. ஐசிசி உலகக்கோப்பை தொடர் முழுவதும் ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வைத்துள்ளது.
எதில் காணலாம்?
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட சேனல்களில் இங்கிலாந்து - நியூசிலாந்து மோதும் போட்டியை காணலாம்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலி (app) மற்றும் இணையதளத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து ஆடும் முதல் போட்டியை இலவசமாக பார்க்கலாம். ஹாட்ஸ்டார் சந்தா செலுத்தாதவர்களும் போட்டியை இலவசமாக பார்க்கலாம்.