T20 உலக கோப்பை கிரிக்கெட் முதல் போட்டி - இலங்கையை வீழ்த்தி நமிபியா அணி அபார வெற்றி...!

Cricket Sri Lanka Cricket T20 World Cup 2022 Namibia National Cricket Team
By Nandhini Oct 16, 2022 07:58 AM GMT
Report

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில், இலங்கையை வீழ்த்தி நமிபியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி இன்று முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

இரு அணிகளாக பிரிவு

இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 'ஏ' பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமிபியா, 'பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.

t20 world cup 2022

இலங்கையை வீழ்த்தி நமிபியா அபார வெற்றி

இந்நிலையில், டி20 உலக கோப்பையின் முதல் சுற்றின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை-நமிபியா அணிகள் மோதிக்கொண்டன.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. நமிபியா பந்துவீச்சாளர்கள் மிகவும் கட்டு கோப்புடன் பந்து வீசினார்கள். இதனால், நமிபியா வீரர்கள் இலங்கையின் விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினர்.

அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் நமிபியா பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை திணறடித்தனர்.

இப்போட்டியின் இறுதியில், 19 ஓவர்கள் முடிவில் நமிபியா 55 ரன்கள் வித்தியாசத்தில் ஆசிய சாம்பியனான இலங்கையை வீழ்த்தி மாபெரும வெற்றி பெற்றுள்ளது.

நமிபியா அணி தரப்பில் பெர்னார்ட், பென் ஷிகோங்கா, ஜான் பிரைலின்க், டேவிட் வைஸ் தலா 2 விக்கெட்டும், ஜே.ஜே.ஸ்மித் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்று நமிபியா அணி கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் நமிபியா அணி கிரிக்கெட் வீரர்களுக்கு அவரது ரசிகர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.