டி20 உலககோப்பை: இடம்பிடித்த நட்சத்திர வீரர்! கொண்டாடும் ரசிகர்கள்!

Cricket Indian Cricket Team T20 World Cup 2022
By Sumathi 2 மாதங்கள் முன்

டி20 உலககோப்பை போட்டியில் ஆல்ரவுண்டர் தீபக் ஹுடா இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அணி புறப்பாடு  

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்திய அணி தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

டி20 உலககோப்பை: இடம்பிடித்த நட்சத்திர வீரர்! கொண்டாடும் ரசிகர்கள்! | World Cup 2022 Deepak Hooda Come Back

இதனிடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இன்று லக்னோவில் உள்ள ஏகனா அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. இந்த ஒரு நாள் தொடர் முடிவுக்கு பின் டி20 உலககோப்பை விளையாட உள்ளது. இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

BCCI-ஆல் அறிவிக்கப்பட்ட 15 வீரர்கள் மட்டும் முதலில் ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர் என்றும், மற்ற பேக் அப் வீரர்கள் தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் தொடரை முடித்துக்கொண்டு செல்வார்கள் என்றும் கூறப்பட்டது.

 முகமது ஷமிக்கு வாய்ப்பா?

அதன் படி, 15 வீரர்களில், இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமக விலகியுள்ளதால் மொத்தம் 14 வீரர்கள் மட்டுமே புறப்பட்டனர்.

டி20 உலககோப்பை: இடம்பிடித்த நட்சத்திர வீரர்! கொண்டாடும் ரசிகர்கள்! | World Cup 2022 Deepak Hooda Come Back

இவருக்கு மாற்று வீரராக முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சஹார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் ஷமி தான் இடம் பெறுவார் எனவும் கூறப்படுகிறது.

 அணியில் தீபக் ஹூடா

இந்த நிலையில், இந்திய அணிக்கு ஒரு நற்செய்திகாக நட்சத்திர ஆல்ரவுண்டர் தீபக் ஹுடாவும் இந்திய அணியுடன் பயணித்துள்ளார். மேலும், தீபக் ஹூடாவுக்கு முதுகு வலி பிரச்சினை இருந்து ஓய்வுக்கு பின் தற்போது முழுமையாக குணமடைந்துவிட்டதாக பிசிசிஐ தெரிவித்தது.

இதனால் இவரின் பேட்டிங்கும் இந்திய அணிக்கு பக்க பலமாக இருக்கும் என முன்னாள் வீரர்களும் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.