இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும் : world cup மைதானத்தில் இந்திய அணி செய்த நெகிழ்ச்சி செயல்
டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 151 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் போட்டி தொடங்கிய போது தொடக்கத்தில் இந்திய வீரர்கள் பிளாக் லைவஸ் மேட்டர் என்ற இயக்கத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் தங்களுடைய ஒரு காலை முட்டி போட்டு நின்றனர்.
— pant shirt fc (@pant_fc) October 24, 2021
இனவெறி தாக்குதலுக்கு எதிரான நடைபெறும் இந்த இயக்கத்திற்கு இந்திய வீரர்கள் ஆதரவு அளித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் போட்டியிலும் வீரர்கள் இந்த பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர்
இதைத் தொடர்ந்து தற்போது இந்திய அணியின் வீரர்களும் தங்களுடைய ஆதரவை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் செயலை பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி வருகின்றனர்.