மனைவியை கொன்று நடுவானிலிருந்து கடலில் வீசிவிட்டு, 15 வருடங்களாக போலீசிடம் நடித்து ஏமாற்றிய கணவர்
நியூயார்க்கில் மருத்துவர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்து விமானத்திலிருந்து கடலில் வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் ராபர்ட் பைரன்பாம். இவர் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர். இவரது மனைவி கெயில் காட்ஸ். இவர்களுக்கு திருமண வாழ்க்கை இரண்டு பேருக்குமே ஒத்துப்போகவில்லை. இதனால், இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில், 1985ஆம் ஆண்டு ஒரு நாள் இருவருக்குள் வழக்கம் போல சண்டை நடந்துள்ளது.
இதனால், கோவத்தின் உச்சத்திற்கு சென்ற ராபர்ட் பைரன்பாம் தனது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்தார். அதனையடுத்து, தனது சொந்த விமானத்தில் மனைவியின் சடலத்தை எடுத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் அட்லாண்டிக் கடலில் வீசியிருக்கிறார். தனது மேல் சந்தேகம் வராமல் இருக்க மனைவி காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளார்.
இப்படியே சுமார் 15 வருடங்கள் நடித்து ஏமாற்றிய ராபர்ட் பைரன்பாம் யிடம் சமீபத்தில் விசாரணை நடந்தது. அதில் தனது மனைவியை சொந்த விமானத்திலிருந்து அட்லாண்டிக் கடலில் வீசியதை ஒப்புக் கொண்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவியை கழுத்தை நெரித்து கொண்டதாகவும், தனது கோபத்தை கட்டுப்படுத்தும் வகை தெரியாத ஒரு மனிதராக தான் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மனைவியை கொன்ற குற்றத்திற்காக 2000ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருடைய பரோல் வேண்டுக்கோள் நிராகரிக்கப்பட்டது. மேலும் வருகின்ற நவம்பர் மாதம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.
