2 ஆண்டுகளாக ப்ரிட்ஜில் மறைத்து வைக்கப்பட்ட 4 வயது சிறுவனின் உடல்! அதிர வைத்த சம்பவம்

world
By Nandhini Jul 07, 2021 12:45 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அமெரிக்காவில் ரிச்மன்ட் நகரில் உள்ள வீட்டில் மனித உடலொன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, உடனே அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.

அப்போது, வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் (Freezer) 4 வயது சிறுவனின் சடலம் ஒன்றை இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, அச்சிறுவனின் பெற்றோரான, கெஸ்கின் வீவர் (Kassceen Weaver) மற்றும் டீனா டி வீவர் (Dina D. Weaver) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவனின் பெயர் எலைல் எடன். அந்த சிறுவனின் சடலத்தை சுமார் 2 வருடங்களுக்கு மேலாக அந்த குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவனின் மரணத்துக்கு காரணம் கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் சடலம் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

2 ஆண்டுகளாக ப்ரிட்ஜில் மறைத்து வைக்கப்பட்ட 4 வயது சிறுவனின் உடல்! அதிர வைத்த சம்பவம் | World Crime