எனக்கே ஸ்கெட்ச்சா? சர்வதேச நீதிமன்றத்தை அலறவிட்ட ரஷ்ய அதிபர்
உக்ரைனுக்கு எதிரான போர்தொடுத்த காரணத்தினால் ரஷ்ய அதிபர் புதினுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
உக்ரைன் ரஷ்ய போர்
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுகளை கடந்து போர் நடந்து வருகின்றது, இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிராக நடந்து வரும் போரில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(ஐசிசி) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
புதினுக்கு பிடி வாரண்ட்
உக்ரைன் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்துதல், உயிரிழப்பு போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் விளாடிமிர் புதின் மீது கைது வாரண்ட் தயார் செய்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தில் ரஷ்யா உறுப்பினராக இல்லை மற்றும் ரஷ்யா இந்த அமைப்புடன் ஒத்துழைக்காது, மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் இருந்து வரும் கைதுக்கான சாத்தியக்கூறு, ரஷ்யாவிற்கு சட்டப்பூர்வமாக செல்லாது.
அசால்ட் ரஷ்யா
ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், புதினுக்கான ஐசிசியின் கைது வாரண்ட்டை டாய்லெட் பேப்பருடன் ஒப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், டாய்லெட் பேப்பர் எமோஜியுடன் இந்தக் காகிதத்தை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கத் தேவையில்லை என்று பதிவிட்டிருந்தார்.
2000 ஆம் ஆண்டில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நிர்வகிக்கும் ரோம் சட்டத்தில் ரஷ்யா கையெழுத்திட்டது, ஆனால் உறுப்பினராவதற்கான ஒப்பந்தத்தை ரஷ்யா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் தற்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.