ஒமைக்ரான் இதுவரை இல்லாத வேகத்தில் பரவி வருகிறது - WHO
தகவல் கொரோனா வைரஸ் தொற்று இதுவரை இல்லாத அளவிற்கு, ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதேனோம் கூறியதாவது -
இதுவரை ஒமைக்ரான் வைரஸ் 77 நாடுகளுக்கு பரவி இருக்கிறார். உண்மையில் பெரும்பாலான நாடுகளுக்கு ஒமைக்ரான் பரவியுள்ளதாகவும், ஆனால் பல நாடுகளில் அது கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் தொற்று இதுவரை இல்லாத அளவிற்கு, ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளின் செயல்திறனே இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தத் தொடங்கப்பட்டு விட்டது. இப்பிரச்சினை உலகளவில் சமநிலையை பாதிக்கும். தடுப்பூசிக்கு எதிராக உலகசுகாதார அமைப்பு செயல்படவில்லை. தங்கள் நோக்கம் உலக மக்களின் உயிரை காப்பது மட்டுமே.
இவ்வாறு அவர் பேசினார்.
