கொரோனா வைரஸ் அழிக்க சூப்பர் சூயிங்கம் - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

world-corona- Discovery by American scientists
By Nandhini Dec 07, 2021 06:01 AM GMT
Report

கொரோனா வைரஸ் உலகமெங்கும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில், புது வகையான ஓமிக்ரோன் வைரஸும் பரவி வருவதால், உலக மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல வழிகளில் நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது.

தற்போது, அமெரிக்க விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை அழிக்க சூப்பர் சூயிங்கம்மை கண்டுபிடித்துள்ளனர். இந்த சூயிங்கம்மை தயாரிக்கும் முயற்சியில் தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர்.

இது குறித்து, அமெரிக்க ஆய்வு தலைமை அதிகாரி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஹென்றி டேனியல் கூறியதாவது -

கொரோனா வைரஸ் ஒருவர் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது வைரஸ் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. இதனால், உமிழ்நீரில் உள்ள கொரோனா வைரஸ் எங்கள் சூயிங்கம் கொன்று விடும். கொரோனா வைரஸ் உருவாகும் இடத்திலேயே அழிக்கப்படும்.

இதனால், கொரோனா வைரஸ் பரவலும் தடுக்கப்படும். இந்த சூயிங்கம்மில் தாவரத்திலிருநது பெறப்படும் ‘ஏசிஇ2’ என்ற புரதம் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா நோயாளிகளின் உமிழ்நீர் மாதிரியில் இதை பரிசோதித்தபோது, நல்ல பலனை கொடுத்துள்ளது. இந்த ஆய்வுகள் நல்ல பலனைக் கொடுத்தால் இந்த சூயிங்கம் வைத்தே கொரோனா வைரஸை கொன்றுவிட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

கொரோனா வைரஸ் அழிக்க சூப்பர் சூயிங்கம் - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு | World Corona Discovery By American Scientists