மலேஷியாவில் நாய்களிடம் பரவும் கோவிட் தொற்று!

world-corona
By Nandhini May 30, 2021 03:42 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் எட்டு பேருக்கு நாய்களிடம் பரவும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தொற்று நோய் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் பேராசிரியர் டாக்டர் கிரிகோரிகிரே கூறியதாவது -

மலேஷியாவில் நாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது புதிது கிடையாது. மாணவர்களுடன் இணைந்து, ஒரு சோதனை கருவியை உருவாக்கியுள்ளேன். எந்த வைரசையும் இந்த கருவி வழியாக கண்டு பிடித்து விட முடியும்.

இந்த கருவியால், மலேஷியாவின் சர்வேக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில், நாயிடம் இருந்து, அவர்களுக்கு தொற்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எங்களது குழு பரிசோதித்த, 301 மாதிரிகள், அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழகத்தின் பிரபல தொற்று நோய் ஆராய்ச்சியாளர் அனஸ்தேசியா விளாசோவாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

'நாய்கள் வாயிலாக பெரிய அளவில் கோவிவ் வைரஸ் பரவ முடியாது. அப்படியே பரவினாலும், மனிதர்களுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால் யாரும் பயப்பட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.