சீனாவில் கோலாகலமாக நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் - இந்தியா புறக்கணித்தது

olympic world-china india-ignored
By Nandhini Feb 04, 2022 04:15 AM GMT
Report

சீனாவில் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கை தூதரக ரீதியாக இந்தியா புறக்கணித்திருக்கிறது. சீனாவில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், பாலியல் புகாரில் டென்னிஸ் வீராங்கனை மிரட்டப்பட்ட சம்பவமும் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் 24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்க உள்ளது. முன்னதாக, ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்லும் பொறுப்பு சீன ராணுவ வீரர் ஃபாபிலோவுக்கு வழங்கப்பட்டது. இவர், 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடையவர்.

சீனாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், குளிர்கால ஒலிம்பிக்கை தூதரக ரீதியாக புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

மேலும் தொடக்க விழாவின் நேரலையை மத்திய அரசின் உத்தரவுப்படி தூர்தர்ஷன் ரத்து செய்திருக்கிறது. ஏற்கெனவே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தூதரக ரீதியாக குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.