கோவிலுக்கு சென்ற குழந்தைகள் சடலமாய் மிதந்த பரிதாபம்
விழுப்புரத்தில் கோவிலுக்கு சென்ற குழந்தைகள் சடலமாய் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தின் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து, இவரது மகள் கீர்த்தனா, ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
கேசவன் என்பவரது மகள் மகாலட்சும், ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார், சம்பவ தினத்தன்று இருவரும் அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்றுள்ளனர். வெகு நேரமாகியும் குழந்தைகள் இருவரும் வீடு திரும்பிவில்லை.
இதனால், குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கோவில் குளத்தில் இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் குழந்தைகளின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.